உலக புத்தக தின போட்டிகளில் - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு :

திப்பணம்பட்டியில் நடைபெற்ற உலக புத்தக தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
திப்பணம்பட்டியில் நடைபெற்ற உலக புத்தக தின போட்டியில் வெற்றி பெற்ற மாணவிக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
Updated on
1 min read

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி கிளை நூலகத்தில், பாரதியார் வாசகர் வட்டம் சார்பில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி,பொதுஅறிவுப் போட்டி மற்றும் நூலகத்தில் அதிக நேரம் செலவிடல் போட்டிகள் நடைபெற்றன.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. விழாவுக்கு வாசகர் வட்ட கவுரவ தலைவர் பால்சாமி தலைமை வகித்தார். கிளை நூலகர் ரவிச்சந்திரன் வரவேற்றார். வாசகர் வட்டச் செயலாளர் தங்கராஜ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஊர்பெரியவர் சண்முகம், நல்லாசிரியர் மதனசிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

‘நூலகம் செல்வோம்; உலகைஅறிவோம்’ என்ற தலைப்பில் புத்தக வாசிப்பின் அவசியம் குறித்துஆசிரியர் சுகுமார் பேசினார். ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ,மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியர் ராகவன்,மகேஷ், ஆடிட்டர் சத்தியராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சந்துரு நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை வேல்முருகன் மற்றும் நூலக உதவியாளர் கனக ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in