தொழிலாளர் நல வாரிய ஆன்லைன் பதிவுகள் தேக்கம் : நடவடிக்கை எடுக்க ஏஐடியுசி கோரிக்கை
தமிழ்நாடு ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் க.சுரேஷ், செயலாளர் சி.சண்முகம் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு விவரம்:
தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு (அமைப்புசாரா) தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித் தல் பணிகள் அனைத்தும் ஆன் லைனில் மட்டுமே ஏற்றுக் கொள் ளப்படும், நேரில் அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள் ளப்பட மாட்டாது என தொழிலாளர் துறை அறிவித்துள்ளது.
இணையதள வசதிகளில் ஏற்படும் குறைபாடுகளால் பதிவு செய்யப்படும் மனுக்கள் நூற்றுக் கணக்கில் தேங்கிக் கிடக்கின்றன.
திருச்சி மன்னார்புரம் செங்கு ளம் காலனியில் உள்ள தொழிலா ளர் அலுவலர் சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலகத்துக்கு ஆன் லைன் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் தொடர்புடைய கிராம நிர்வாக அலுவலரிடம் சரி பார்ப்பு சான்றுக்காக பரிந்து ரைக்கு அனுப்பப்பட்டு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேக்கம் அடைந்துள்ளன. இத னால் தொழிலாளர்கள் உரிய அடையாள அட்டை பெற முடியா மல் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எனவே, மாவட்ட ஆட்சியர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
