உலக மண் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி :

உலக மண் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி :
Updated on
1 min read

உலக மண் தினத்தை முன்னிட்டு மண்ணின் வளம் குறித்து வேளாண்மை கல்லூரி மாணவிகள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் உள்ள வேளாண்மை கல்லூரி மாணவிகள் லட்சுமி, சிந்துஜா, சவுமியகலா, சுகன்யா, உமா மகேஸ்வரி, வாகினி, வர்ஷினி, வைசாலி உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் பட்டுக்கோட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் பணி அனுபவத்தை பெறுவதற்காக களப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று முன்தினம், நாட்டுச்சாலை கிராமத்தில் உலக மண் தினத்தை பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

அப்போது, கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மண்ணின் வளம், தரம், பரிசோதனை செய்வதன் அவசியம், இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வை மாணவிகள் ஏற்படுத்தினர். இதையடுத்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவிகளை கிராமத்தினர் பாராட்டினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in