

திருச்சி மாவட்ட, லால்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக புத்தக தினம் இணையவழியில் நேற்று கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சி.மாரியம்மாள் தலைமை வகித்துப் பேசினார். திருச்சி வருமான வரித்துறை இணை ஆணையர் பி.தரன் சிறப்பு விருந்தினராகப் பங் கேற்று, புத்தங்களின் சிறப்பு குறித்தும், புத்தகங்கள் வாசிப் பதன் அவசியம் குறித்தும், ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பேசினார்.
நிகழ்ச்சியில் மாணவிகள் 3 புத்தகங்களை மதிப்புரை செய்து பேசினர். பேராசிரியர்கள் சாமிநாதன், ஜெய்சங்கர், சுலை மான், தீபாதேவி, சங்கீதா, விஜயபாரதி மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
முன்னதாக பேராசிரியர் சே.இளமதி வரவேற்றார். நிகழ்ச்சியை கல்லூரி புத்தக மைய ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ம.ராஜா தொகுத்து வழங்கினார்.