

ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிப்பது தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (ஏப்.23) கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையத்தை இயக்க அனுமதி கோரி, வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. மத்திய, மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியது. மத்திய அரசு இதற்கு அனுமதியளித்துள்ள நிலையில், மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று(ஏப்.23) கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் காலை 8 முதல் 9 மணி வரை நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்குமாறு, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் தொலைபேசி மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்ட முடிவின் அடிப்படையில் அரசு, தனது நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் தெரிவிக்கும் எனத் தெரிகிறது.