ஆர்.எஸ்.புரம் நீச்சல் குளத்தை பயிற்சிக்காக திறக்க ஆய்வு :

சுகாதாரத்துறை அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம். படம்:ஜெ.மனோகரன்
சுகாதாரத்துறை அதிகாரிகளால் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட ஆர்.எஸ்.புரத்தில் உள்ள மாநகராட்சி நீச்சல் குளம். படம்:ஜெ.மனோகரன்
Updated on
1 min read

வீரர்களின் பயிற்சிக்காக ஆர்.எஸ்.புரம் நீச்சல் குளத்தை திறப்பது குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான நீச்சல்குளம் உள்ளது. இங்கு மாநில மற்றும் தேசிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா தொற்று பரவலால் கடந்தாண்டு மூடப்பட்ட நீச்சல் குளமானது, 6 மாதங்கள் கழித்து சமீபத்தில் திறக்கப்பட்டது.

இந்நிலையில், கரோனா தொற்றின் 2-ம் அலைமாநகராட்சி பகுதிகளில் தீவிரமடைந்ததை தொடர்ந்து, கடந்த வாரம் நீச்சல் குளத்தை மூட மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். இதனால் வீரர்களுக்கான பயிற்சி பாதிக்கப்பட்டது. வீரர்களின் பயிற்சிக்கான முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, நீச்சல் குளத்தை திறக்க வீரர்களின் பெற்றோர் மற்றும் விளையாட்டு அமைப்புகள் சார்பில் மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையடுத்து, நீச்சல் குளத்தை திறப்பது குறித்து இறுதிமுடிவெடுக்க மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள நீச்சல் குளம் மற்றும்வளாகங்களை நேற்று ஆய்வு செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in