பெல் நிறுவனம் சார்பில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு - ரூ.7 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல் :

பெல் நிறுவனம் சார்பில்  திருச்சி அரசு மருத்துவமனைக்கு  -  ரூ.7 லட்சம் மதிப்பிலான  பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கல் :
Updated on
1 min read

திருச்சி பெல் நிறுவனம் சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பிலான நோய் தொற்று தடுப்பு, பாதுகாப்பு உபகரணங்கள், திருச்சி அரசு மருத்துவமனைக்கு நேற்று வழங்கப்பட்டன.

திருச்சி பெல் நிறுவனம் தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் கீழ் 8,500 மருத்துவக் கையுறைகள், 8,000 என்.95 முகக் கவசங்கள், 600 முழு உடல் பாதுகாப்பு உடைகள் என ரூ.7 லட்சம் மதிப்பிலான பாதுகாப்பு உபகரணங்களை திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் வனிதாவிடம் பெல் கூடுதல் பொது மேலாளர் (மனிதவளம்) என்.சி.போலி வழங்கினார்.

அப்போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் அருண்ராஜ், கரோனா சேவைகள் துறை தலைவர் டி.நேரு, கரோனா சிறப்பு அலுவலர் சதீஷ்குமார், பெல் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஏ.எழில் ஆகியோர் உடனிருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in