சாலையில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த கார் :

சாலையில் சென்றபோது தீப்பிடித்து எரிந்த கார் :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் தீப்பிடித்து எரிந்தது. இதில் பயணம் செய்த 5 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தை அடுத்த திருப்புறம் பயத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன்(45). இவர், கும்பகோணத்திலிருந்து தனது குடும்பத்தினர் 4 பேருடன் காரில் நேற்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாச்சலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கல்லாத்தூர் அருகே கார் சென்றபோது, திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதைக் கண்ட சந்திரசேகரன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, காரிலிருந்த அனைவரையும் உடனடியாக வெளியே வரச் செய்தார். சிறிது நேரத்தில் கார் முழுவதும் எரிய தொடங்கியது.

தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் தீயணைப்பு துறையினர் எரிந்து கொண்டிருந்த காரின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர். காஸ் கசிவு காரணமாக காரில் தீப்பற்றியிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in