

திருநெல்வேலி நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் நிறுவன கி.ளை மேலாளர் ஆர். மகேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: உலக புத்தக தினத்தையொட்டி திருநெல்வேலி எஸ்.என். ஹைரோடு நியூ செஞ்சுரி புக் ஹவுஸில் இன்று (23-ம் தேதி) முதல் வரும் 30-ம் தேதி வரை சிறப்பு புத்தக கண்காட்சி நடத்தப்படவுள்ளது. இக் கண்காட்சியில் 10 முதல் 50 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும். கரோனா தொற்று காரணமாக புத்தக கண்காட்சிக்கு வருவோர் சமூக இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.