கரோனா பரிசோதனை செய்தால் மட்டுமே - வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் : தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு

கரோனா தொற்று பரவல் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்து தலைமை செயலாளர் ராஜுவ் ரஞ்சன் காணொலி காட்சி வாயிலாக வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அருகில், வேலூர் சரக டிஐஜி காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் உள்ளிட்டோர்.படம்: வி.எம்.மணிநாதன்.

Updated on
1 min read

கரோனா பரிசோதனை செய்தவர் களை மட்டுமே வாக்கு எண்ணும்மையங்களில் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிடப் பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி 3 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் மற்றும் அணைக்கட்டு தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையம் வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்திலும், காட்பாடி தொகுதிக்கு அரசு சட்டக் கல்லூரியிலும், கே.வி.குப்பம் மற்றும் குடியாத்தம் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் எண்ணப்படவுள்ளன.

வரும் மே 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ள நிலையில் கரோனா இரண்டாம் அலை பரவல் அச்சத்தால் வாக்கும் எண்ணும் மையங்களில் பணியாற்ற உள்ள அனைத்து அரசு அலுவலர்கள், வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், காவல் துறையினர் என அனைத்துத் தரப்பினரும் கரோனா பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

தொற்று இல்லாதவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்தில் அனுமதிக்க வேண்டும் என்றும் மாவட்ட நிர்வாகங்களுக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அறிவுரை வழங்கப் பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in