

இரவு நேர ஊரடங்கால் கடலூர்மாவட்ட சாலைகள் வெறிச்சோடி யது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்தது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 9 மணிக்கே கடைகள், மார்க்கெட், பெரிய வணிக வளாகங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட அனைத் தும் அடைக்கப்பட்டன. நகர் புறங் களுக்கு வந்திருந்த பொதுமக்கள் உடன் வீட்டுக்கு திரும்பி சென் றனர். பேருந்துகளும் 9 மணிக்கு மேல் நிறுத்தப்பட்டது. இதனால் மாவட்டத்தில் அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டது. அந்தந்த பகுதியில் போலீஸார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட் டனர். வெளியூரில் இருந்து நீண்ட நேர பேருந்துகளில் வந்தவர்கள் சிலர் சிதம்பரம், கடலூர், பண்ருட்டிஉள்ளிட்ட பேருந்து நிலையங்களில் தங்கி காலையில் சென்றனர். முக்கிய சாலை சந்திப்புகளில் போலீஸார் தடுப்புக் கட்டை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.