

திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை வளாகத்தில் சிஐடியு சார்பில் மருத்துவமனை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஒப்பந்த ஊழியராக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றிய பெண் தொழிலாளியை பணி நீக்கம் செய்ததைக் கண்டித்தும், அவருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தினக் கூலியாக ரூ.540 வீதம் வழங்க வேண்டும். மாதந்தோறும் 5-ம் தேதிக்குள் ஊதியத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் மாறன் தலைமைவகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன் பேசினார். சிஐடியு நிர்வாகிகள் சீனிவாசன், கருணாநிதி, செல்வி, மணிகண்டன், பிரமிளா, ராஜேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.