ஆட்சியர் அலுவலகம் முன்பு ராணுவ வீரர் தர்ணா :

ஆட்சியர் அலுவலகம் முன்பு ராணுவ வீரர் தர்ணா :
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள மருதூர் கிராமத் தைச் சேர்ந்தவர் இளவரசன்(40). இவர், இந்திய ராணுவ படையில் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். 2007-ம் ஆண்டு வீட்டுடன் கூடிய 3 சென்ட் இடத்தை வாங்கியுள்ளார்.

இந்நிலையில், இளவரசன் வீட்டுக்குச் செல்லும் 15 அடி பொதுப்பாதையில் கடந்த மாதம் வருவாய்த் துறையில் பணியாற்றும் குமார் என்பவர் தன்னுடைய நிலம் எனக்கூறி சுவர் வைத்துள்ளார். இதனால், தனது வீட்டுக்கு செல்ல முடிய வில்லை. எனவே, ஆக்கிரமிப்பை அகற்றித் தர வேண்டும் எனக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு இளவரசன் நேற்று தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து போலீஸார் மற்றும் அரசு அலுவலர்கள் ராணுவ வீரருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, அவரிடம் கோரிக்கை மனுவை வாங்கிக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி, அனுப்பிவைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in