

திருநெல்வேலியில் அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வண்ணார்பேட்டையிலுள்ள அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தொமுச அமைப்புச் செயலாளர் ஏ.தர்மன் தலைமை வகித்தார். விடுப்பு விதிகளை மாற்றக் கூடாது. ஊதியத்தை பறிக்கக் கூடாது. வார ஓய்வை அளிக்க வேண்டும். பணிக்கு வந்த தொழிலாளர்கள் அனைவருக் கும் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சிஐடியு பொதுச்செயலாளர் எஸ். ஜோதி, ஏஐடியுசி பொதுச் செயலாளர் என். உலகநாதன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.