

சாத்தான்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்சங்கம் சார்பாக பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் காமராஜர் சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் பொன் முருகேசன் தலைமை வகித்தார். செயலாளர் எட்வின் தேவாசீர்வாதம், சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் செல்வதாஸ் முன்னிலை வகித் தனர்.
ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெயபதி, வழக்கறிஞர் வேணுகோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வங்கி மேலாளர் சுடலைமுத்து நன்றிகூறினார். சுமார் 300 பேருக்கு கபசுர குடிநீர் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.