

தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக சுற்றுலா தலங்கள் நேற்று முதல் மூடப்பட்டன.
தமிழக அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறையின்படி, தஞ்சாவூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க ஏதுவாக சுற்றுலாத் தலங்களான தஞ்சாவூர் அரண்மனை, அரண்மனையில் உள்ள அருங் காட்சியகம், கலைக்கூடம், சரஸ்வதி மகால் நூலகம், ராஜராஜசோழன் மணிமண்டபம், கல்லணை, மல்லிப்பட்டினத்தில் உள்ள மனோரா ஆகிய சுற்றுலாத் தலங்கள் நேற்று முதல் மூடப்பட்டுள்ளன.
எனினும், இவற்றில் பணி யாற்றும் ஊழியர்கள் வழக்கம் போல பணிக்கு வந்து செல்கின் றனர்.