

சேலம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர்.
சேலம் வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் கடந்த வாரம் நடந்தது. இதில், தலைவராக முத்துசாமி, செயலாளராக முத்தமிழ்செல்வன், பொருளாளராக பாபு, நூலகராக அசோக்குமார், செயற்குழு உறுப்பினர்களாக ஞானாம்பாள், நல்லதம்பி, மூர்த்தி, ரஜினிகாந்த், நரேஷ்பாபு, ராஜா, யுவராஜ், கவின், ஹரிஹரன் உள்ளிட்டோர் வெற்றி பெற்றனர்.
புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் நேற்று ஒருங்கி ணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் சங்க அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டனர். தேர்தல் அதிகாரிமணிவாசகம் புதிய நிர்வாகிகளுக்கு பதவிபிரமாணம் செய்துவைத்தார்.
இதில், வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டு, புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.