ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளுக்கு தடை :

ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளுக்கு தடை :
Updated on
1 min read

ஏற்காட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வந்து செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சேலம் மாவட்டத்தில் ஏற் கெனவே தடை விதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் மற்றும் கரோனா தடுப்பு புதிய கட்டுப்பாடுகளுடன் இன்று (20-ம் தேதி) முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை4 மணி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்தளர்வுகளின்றி மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஏற்காட்டுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாபயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது. பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் அருங்காட்சிய கங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. நிலையான வழிகாட்டுநடைமுறைகளைப் பின்பற்றி, தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உட்பட அனைத்து கடைகளும், வணிக வளாகங்கள், அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி) ஒரே நேரத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுடன், இரவு 9 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மருத்துவ வசதிகள் உடைய தனியார் மருத்துவமனைகளுடன், விருப்பப்படும் தங்கும் விடுதிகள் இணைந்து கரோனா பாதுகாப்பு மையங்களாக செயல்பட அனுமதிஅளிக்கப்படுகிறது. இதை சுகாதாரத்துறை ஆய்வு செய்து,தேவைப்படும் அனுமதியை வழங்கலாம். இத்தங்கும் விடுதிகளில் பிற வாடிக்கையாளர்களை தங்க வைக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in