

கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தற்கொலை செய்தது தொடர்பாக கார்ட்டூன் வெளியிட்டதற்காக கார்ட்டூனிஸ்ட் பாலா மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கடந்த 2017-ல் கந்துவட்டி கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசையும், அதிகாரிகளையும் விமர்சித்து கார்ட்டூனிஸ்ட் பாலா என்ற பாலகிருஷ்ணன் (39) கார்ட்டூன் வரைந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இது தொடர்பாக குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து பாலாவை கைது செய்தனர். இந்த வழக்கில் பாலாவுக்கு நெல்லை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளை யில் பாலா மனு தாக்கல் செய் தார். இந்த மனுவை நீதிபதி ஜி.இளங் கோவன் விசாரித்தார். பின்னர் பாலா மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.