

ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் விழாக்கள், விசேஷங்கள் அதிக அளவில் நடக்கும். அப்போது எங்களுக்கு தொழில் வாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்கும். தற்போது கரோனா பரவல் தடுப்பு நட வடிக்கை காரணமாக, கோயில் திருவிழாக்களை பக்தர்கள் பங் கேற்பின்றி நடத்த வேண்டும். கலை நிகழ்ச்சிகள் நடத்த அனு மதியில்லை ஆகிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கட்டுப்பாடுகளை தளர்த்தி விழாக்களை நடத்தவும், அதே நேரம் யாரையும் பாதிக்காத வகையில் விதிமுறைகளை அறிவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.