

திருச்சி பொன்மலையில் உள்ள ரயில்வே மருத்துவமனையில் கரோனா தடுப்பூசிக்கு நேற்று தட்டுப்பாடு ஏற்பட்டதால், ஊசி செலுத்திக் கொள்ள வந்த பொதுமக்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
திருச்சி பொன்மலையில் ரயில்வே மருத்துவமனை உள்ளது. இங்கு ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு கரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டும் செயல்பட்டு வருகிறது. மேலும், இங்கு கரோனா தடுப்பூசியும் போடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக அடுத்த அறிவிப்பு வரும் வரை தடுப்பூசி போடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வாசலில் அறிவிப்பு ஒட்டப்பட்டது.
இதுகுறித்து ரயில்வே மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்த போது, கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தடுப்பூசிகள் (250 டோஸ்) ரயில்வே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து நடைபெற்றது என்றனர்.