சேவல் சண்டை: வாகனங்கள் பறிமுதல் :

சேவல் சண்டை: வாகனங்கள் பறிமுதல் :
Updated on
1 min read

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் காவிரி ஆற்றுக்குள் நேற்று முன் தினம் சட்டவிரோதமாக பந்தயம் கட்டி, சேவல் சண்டை சூதாட்டம் நடத்தப்படுவதாக மாயனூர் போலீ ஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸார் அங்கு சென்றபோது, அங்கிருந்தவர்கள் தாங்கள் வந்த கார்கள், மோட் டார்சைக்கிள்களை அங்கேயே விட்டுவிட்டு சேவல்களுடன் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர்.

இதுகுறித்து சித்தலவாய் கிழக்கு காலனியைச் சேர்ந்த ஊசி என்கிற சரண்ராஜ்(25), கிழக்கு காலனியைச் சேர்ந்த முத்துகுமார்(23), பாண்டியன் (30), மெட்டி என்கிற ராஜேந்திரன் (26), மதன்(25), பாலாஜி(27), இளங்கோ (38), ராஜேஷ்(27), சின்னதம்பி(26) உள்ளிட்டோர் மீது சூதாட்டம் நடத்தியது, தடையை மீறியது, சட்டவிரோதமாக ஒன்றுகூடியது, மிருகவதை தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மேலும், சம்பவ இடத்திலிருந்த 2 கார்கள், 18 இருசக்கர வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து, தலைமறைவானவர்களை தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in