

பர்கூர் அருகே மேற்கூரையில் வெல்டிங் பணியில் ஈடுபட்ட தொழிலாளி தவறி விழுந்து உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் அடுத்த காத்தான் பள்ளம் கிராமத்தில் உள்ளதனியார் பள்ளியில் மேற்கூரைஅமைக்கும் பணி நடந்தது. இப்பணியில், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த கவனூரைச் சேர்ந்த ரமேஷ் (23) என்பவர் வெல்டிங்பணியில் ஈடுபட்டிருந்தார்.அப்போது, எதிர்பாராத விதமாக மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில், பலத்த காயமடைந்த அவர் சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிந்தார். இதுதொடர்பாக கந்திகுப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.