

ரின் சமாதான திட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என டிராக்டர் உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக விவசாய டிராக்டர் உரிமை யாளர்கள் நலச்சங்கத்தினர், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தேசிய வங்கிகளில் வராக் கடன்களை ரின் சமாதான் திட்டத்தில் முடித்துக் கொள்ள மார்ச் 31-ம் தேதி வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டது. மேலும் ரின் சமாதான் திட்டத்தை ஒரு மாத காலத்திற்கு நீடித்து ஆணை வழங்கினால் மற்ற கடன் பெற்ற விவசாயிகளும் கடன் தொகையை செலுத்தி முடித்துக் கொள்வார்கள். தேசிய வங்கிகள் மீது ஒரு சில டிராக்டர் கடன்தாரர்கள் மட்டும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். அந்த வழக்குகளை வாபஸ் பெற்று வங்கிகளில் கடன் பெற்ற விவசாயிகள் கடன் தொகையை வங்கியில் செலுத்தி முடித்துக் கொள்ள உள்ளனர். எனவே இக்கோரிக்கைகளை பரிசீலித்து ஆவண செய்ய வேண்டும்.