

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே மீன்பிடித் திருவிழா நடைபெற்றது.
திருப்பத்தூர் அருகே நெடுமரம் கிராமத்தில் ஆண்டுதோறும் நெல் அறுவடைக்கு பிறகு கோடையில் அங்குள்ள கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடப்பது வழக்கம். அதன்படி நேற்று நெடுமரம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடந்தது.
நெடுமரம், ஊர்குளத்தான்பட்டி, அரிபுரம், சில்லாம்பட்டி, ஜெயமங் கலம், சிறுகூடல்பட்டி உள்ளிட்ட கிராம மக்கள் கண்மாயில் ஊத்தா, கச்சா, மீன்பிடி வலை, கொசுவலையை பயன்படுத்தி மீன்களை பிடித்தனர்.
கெண்டை, கெழுத்தி, குரவை, அயிரை, சிலேபி, கட்லா மீன்கள் கிடைத்தன. இதனை மகிழ்ச்சியுடன் கிராம மக்கள் வீடுகளுக்குக் கொண்டு சென்று சமைத்து சாப்பிட்டனர்.