தலைவாசல் தினசரி சந்தையில் - வரத்து அதிகரிப்பால் வெண்டைக்காய் விலை சரிவு :

தலைவாசல் தினசரி காய்கறி சந்தைக்கு இருசக்கர வாகனங்களில் வெண்டைக்காய் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள்.
தலைவாசல் தினசரி காய்கறி சந்தைக்கு இருசக்கர வாகனங்களில் வெண்டைக்காய் மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள்.
Updated on
1 min read

தலைவாசல் தினசரி சந்தைக்கு வெண்டைக்காய் வரத்து அதிகரித்ததால் விலை குறைந் துள்ளது.

தலைவாசல் தினசரி காய்கறி சந்தை தமிழக அளவில் குறிப்பிடத்தக்க மொத்த காய்கறி சந்தையாகும். இங்கு தலைவாசல் மற்றும் அதன் சுற்று வட்டாரக் கிராமங்கள், அண்டை மாவட்டங்களான பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் இருந்து விவசாயிகளால் வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய், பச்சை மிளகாய், தேங்காய் உள்ளிட்ட காய்கறிகள் தினமும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

வெண்டைக்காய் அறுவடைக் காலம் என்பதால், கடந்த ஒரு வாரமாக தற்போது, தலைவாசல் சந்தைக்கு வெண்டைக்காய் வரத்து அதிகரித்து வருகிறது.

கடந்த வாரத்தில் தினசரி 50 மூட்டைகள் வந்த நிலையில், தற்போது 100-க்கும் அதிகமான மூட்டைகள் விற்பனைக்கு வருகிறது. வரத்து அதிகரிப்பால் வெண்டைக்காய் மொத்த விலையில் கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை விற்பனையாகிறது.

இதேபோல,கத்தரிக் காய் விளைச்சலும் அதிகரித்துள்ளதால், நாளொன்றுக்கு 50 முதல் 70 மூட்டைகள் விற்பனைக்கு வருகிறது. மேலும், முள்ளங்கி, பாகற்காய், முருங்கைக்காய் வரத்தும் அதிகரித்துள்ளது.

தலைவாசல் சந்தைக்கு வரும் வெண்டைக்காய், கத்தரிக்காய் உள்ளிட்டவை சென்னை, பெங்களூரு, புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு வியாபாரிகள் அனுப்பி வைக்கின்றனர். வெண்டை விலை குறைவால் விவசாயிகள், வியாபாரிகள் வேதனை அடைந்துள்ளனர்.

காய்கறிகள் விளைச்சல் அதிகரிப்பின்போது,விலை குறைந்து வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுக்க, குளிர்பதனக் கிடங்கு ஏற்படுத்த வேண்டும் என விவசாயிகள் வலி யுறுத்தியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in