

தூத்துக்குடியில் காவல் துறையினருக்கான கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. கணேஷ் நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமை காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் தொடங்கி வைத்து அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கி பேசுகையில், “அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்றார்.
உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் உள்ளிட்ட 30 பேர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர். நகர துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ், மாநகராட்சி நகர்நல அலுவலர் வித்யா, ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் ஆர்த்தி கலந்துகொண்டனர்.