

வடகிழக்கு பருவமழை காலத்தி லேயே மீன்கள் இனப்பெருக்கம் செய்வதால், மீன்பிடி தடைக் காலத்தை அக்டோபர்- நவம்பர் மாதங்களில் அமல்படுத்த வேண் டும் என மத்திய அரசுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடல் வளத்தைப் பாதுகாக்கவும், மீன்களின் இனப்பெருக்கத் துக்காகவும் கடந்த ஏப்.15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த தடைக்காலத்தில் மீனவர்கள் தங்களின் படகுகள், மீன்பிடி உபகரணங்களை சீரமைத்து வருகின்றனர். இருப்பினும், இந்த மீன்பிடி தடைக்காலத்தால் மீனவர்களுக்கும், அதன் பிறகு அரசுக் கும் எவ்வித பயனும் இல்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மீன வர் பேரவை மாநில பொதுச் செயலாளர் தாஜூதீன் கூறியது:
இந்திய மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டம் 1983 விதிப்படி தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங் களில், தற்போது உள்ள மீன்பிடி தடைக்காலம் நடைமுறைப் படுத்தப்பட்டது. இந்த மீன்பிடி தடைக்காலத்தில் மீன்களின் இனப்பெருக்கம் அதிகளவில் இருக்கும் என மீன்வளத் துறை யினரால் கூறப்படுகிறது.
ஆனால், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், நாட்டுப்படகு மீன வர்கள் பிடித்து வரும் மீன்களில், மீன் முட்டைகளோ, மீன் குஞ்சுகளோ இருப்பதில்லை. தமிழகம், புதுச்சேரியில் அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பொழியும். அப்போது தான், ஆழ்கடலில் உள்ள மீன்வகை கள் கரைக்கு வந்து இனவிருத்தி செய்யும். இதன் காரணமாக, அக்டோபர்- டிசம்பர் மாதங்களில் மீன்பிடிக்கச் செல்லும்போது மீன் முட்டைகளும், மீன் குஞ்சுகளும் கிடைக்கின்றன. இதனால், ஆண்டு தோறும் மீன்வளம் குறைந்து வருகிறது. மேலும், வெளிநாடுகளுக்கான மீன் ஏற்றுமதியும் குறைந்து, அந்நிய செலாவணி மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானத் திலும் இழப்பு ஏற்படுகிறது. எனவே, மத்திய அரசு கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச் சட்டத்தை திருத்தி, மீன்பிடி தடைக்காலத்தை அக்டோபர், நவம்பர் மாதங்களுக்கு மாற்றியமைக்க வேண்டும் என்றார்.
மல்லிப்பட்டினம் மீனவர் குணசேகரன் கூறியபோது, “மீன்பிடி தடைக்காலம் என 60 நாட்களும், வடகிழக்கு பருவமழையின்போது 60 நாட்களும் என ஆண்டுக்கு 120 நாட்கள் தொழில் முடங்கி விடுகிறது. மேலும், வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே கடலுக்குச் செல்ல வேண்டும் என்பதால், வெகு சிரமத்துக்கிடையே தான் குடும்பத்தை நடத்த வேண்டி யுள்ளது. எனவே, மீன்பிடி தடைக்காலத்தை வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர்-டிசம்பர் மாதங்களுக்கு மாற்றிவிட் டால், மீன்பிடிக்கச் செல்லாமல் இருக்கும் காலம் 60 நாட்களாக குறைந்துவிடும்” என்றார்.