நடிகர் விவேக் மறைவு - மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி :

நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக செய்துங்கநல்லூர் அரசு நூலகத்தில் மரக்கன்று நட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்ட தன்னார்வலர்கள்.
நடிகர் விவேக் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக செய்துங்கநல்லூர் அரசு நூலகத்தில் மரக்கன்று நட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்ட தன்னார்வலர்கள்.
Updated on
1 min read

நடிகர் விவேக் நேற்று முன்தினம் காலமானார். அவர் பசுமை கலாம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார். அதனை நினைவுகூறும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

செய்துங்கநல்லூர் அரசு நூலகத்தில் விவேக் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அவர் நினைவாக மரக்கன்று நடப்பட்டது. ஊராட்சி தலைவர் பார்வதி நாதன் தலைமை வகித்தார். விவசாய சங்கத் தலைவர் குமார், வாசகர் வட்ட துணைத் தலைவர் முத்தாலங்குறிச்சி காமராசு, நூலகர் லெட்சுமணன் பங்கேற்றனர்.

சாத்தான்குளத்தில் தமிழ்நாடு கலை இலக்கிய நாடக நடிகர் சங்கம் சார்பாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது. விவேக் உருவ படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

தூத்துக்குடியில் ஆல் கேன் டிரஸ்ட் சார்பாக மரக்கன்றுகள் நடப்பட்டன. டிரஸ்ட் நிர்வாகி மோகன்தாஸ் சாமுவேல் உள்ளிட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

பாவூர்சத்திரம்

விவேக் கனவை நனவாக்க அதிகமான மரக்கன்றுகள் நடுவது என முடிவு செய்து, அவரது மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in