தீரன்சின்னமலையின் 265-வது பிறந்த தினத்தையொட்டி பெருந்துறையில் அவரது உருவப்படத்திற்கு கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மாலை அணிவித்து  மரியாதை செலுத்தினார்.
தீரன்சின்னமலையின் 265-வது பிறந்த தினத்தையொட்டி பெருந்துறையில் அவரது உருவப்படத்திற்கு கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கரோனா தடுப்பூசி போடுவதை வேகப்படுத்தி இருக்க வேண்டும் : மத்திய, மாநில அரசுகள் மீது கொமதேக ஈஸ்வரன் குற்றச்சாட்டு

Published on

தடுப்பூசி போட ஆரம்பித்த காலத்தில் தடுப்பூசி திருவிழாவைநடத்தி வேகப்படுத்தி இருக்க வேண்டும், என கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறினார்.

தீரன்சின்னமலையின் 265-வது பிறந்த தினத்தையொட்டி பெருந்துறையில் அவரது உருவப் படத்திற்கு கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது:

வாக்கு எண்ணும் மையங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்குமாறு தலைவர்கள் வேண்டுகோள் வைத்த போதும்பாதுகாப்பு அளிக்காமல் இருப்பது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

பொதுமக்களே சந்தேகிக்கும் வகையில் நள்ளிரவில் தேவையில்லாமல் வாகனங்கள் உள்ளே வந்து போவதும், மடிக்கணினியோடு சிலர் நடமாடுவதும் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்து கிறது.

தமிழகத்தில் ஆட்சி திரும்ப வராது என்ற முடிவுக்கு வந்துவிட்டதால் அவசரம் அவசரமாக சாலைகளின் பெயர்களை மாற்றுகிறார்கள். டெல்லியிலிருந்து கொடுக்கும் அழுத்தமே பெயர்மாற்றம் நடக்கிறது. இந்த பிரச்சினைகள் மே 2-ம் தேதிக்கு பிறகு சரி செய்யப்படும்.

கரோனா பரவல் அதிகமாக இருப்பதற்கு மத்திய, மாநில அரசுகளின் மெத்தன போக்கு தான் காரணம். தடுப்பூசி போட ஆரம்பித்த காலத்தில் தடுப்பூசி திருவிழாவை நடத்தி வேகப்படுத்தி இருக்க வேண்டும்.

தடுப்பூசி செலுத்தினாலும் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். பாதுகாப்பு வழிமுறை களை மக்கள் பின்பற்ற வேண்டும்.

நடிகர் விவேக் திடீரென்று மாரடைப்பால் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. அவர் நடிகர் மட்டுமல்ல சமூகத்திற்குத் தேவையான பல கருத்துக்களை கூறியவர். அவருடைய மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல சமூகத் திற்கே இழப்பு.

இவ்வாறு அவர் கூறினார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in