

மதுரை மாவட்டம் திருமங்கலம் சவுக்கத்அலி தெருவைச் சேர்ந்த ரகமத்துல்லா மகன் அப்சல்கான் (32). இவர் தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் வன்முறை செய்துள்ளார்.
சிறுமி அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அப்சல்கானை கைது செய்தார்.