

திருநெல்வேலி, தென்காசி மாவட் டங்களில் பல்வேறு இடங்களில் கோடை மழை நேற்று நீடித்தது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி மணிமுத்தாறு அணைப் பகுதியில் 1.8 மி.மீ., பாளையங் கோட்டையில்10, திருநெல்வேலியில் 0.2 , சங்கரன்கோவிலில் 3 மி.மீ. மழைபதிவாகியிருந்தது. திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில்உள்ள அணைகளின் நீர்மட்டம்விவரம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம் )பாபநாசம்- 105.40 அடி (143), சேர்வலாறு- 118.54 அடி (156), மணிமுத்தாறு- 92.60 அடி (118), வடக்கு பச்சையாறு- 43.39 அடி (50), நம்பியாறு- 12.72 அடி (22.96), கொடுமுடியாறு- 6 அடி (52.50), கடனா- 68.50 அடி (85), ராமநதி- 62.75 அடி (84), கருப்பாநதி- 52.82 அடி (72), குண்டாறு- 30 அடி (36.10), அடவிநயினார் கோயில்- 30 அடி (132.22).
கன்னியாகுமரி
மாவட்டத்தில் நேற்று அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 41 மிமீ., மழை பெய்திருந்தது. இரணியலில் 32 மிமீ., ஆனைக்கிடங்கில் 28, முள்ளங்கினாவிளையில் 20, சிற்றாறு ஒன்றில் 17,பேச்சிப்பாறையில் 12, சிவலோகத்தில் (சிற்றாறு 2) 17, தக்கலையில் 13, மாம்பழத்துறையாறில் 16, அடையாமடையில் 17 மிமீ., மழை பதிவாகியிருந்தது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 40 அடியாக உள்ள நிலையில் அணைக்கு விநாடிக்கு 516 கனஅடி தண்ணீர் வருகிறது. 72 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 53 அடியாக உள்ளது. அணைக்கு 54 கனஅடி தண்ணீர் வருகிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் 25 அடி உயரம் கொண்ட முக்கடல் அணையில் நீர்மட்டம் 4.7 அடியாக உள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களாக விட்டு விட்டு சாரல் மழை பொழிந்து வருகிறது.