மாங்காய்கள் சேதம், அழுகல் தவிர்க்க விவசாயிகளுக்கு வேளாண் மாணவர்கள் பயிற்சி :

வெல்ரம்பட்டி கிராமத்தில் மா விவசாயிகளுக்கு ஏற்றுமதியின் போது மாங்காய்கள் சேதம், அழுகல் தவிர்ப்பது குறித்து வேளாண் மாணவர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.
வெல்ரம்பட்டி கிராமத்தில் மா விவசாயிகளுக்கு ஏற்றுமதியின் போது மாங்காய்கள் சேதம், அழுகல் தவிர்ப்பது குறித்து வேளாண் மாணவர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர் வேளாண் ஆராய்ச்சி மையத்தில், திருவண்ணாமலை மாவட்டம் வாழவச்சனுார் வேளாண்மை கல்லுாரி 4-ம் ஆண்டு மாணவர்கள், ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்திற்காக முகாமிட்டுள்ளனர். இவர்கள் காவேரிப்பட்டணம் அடுத்த வெல்ரம்பட்டி கிராமத்தில் உள்ள மா விவசாயிகளுக்கு, மா அறுவடைக்கு பின் தொழில் நுட்பம் குறித்து விளக்கம் அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

மா சாகுபடியில் அதிகப்படியான மாங்காய்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அவ்வாறு வாகனங்களில் ஏற்றுமதி செய்யும் போது, காய்களில் சேதம் மற்றும் அழுகல் ஏற்படும். இதைத் தவிர்க்க அறுவடைக்குப் பிந்தய தொழில்நுட் பத்தை பின்பற்ற வேண்டும். வாகனங்களில் ஏற்றிச்செல்ல, 70 சதவீதம் முற்றிய காய்களை பறித்தல் வேண்டும். 55 டிகிரி சுடுநீரில், 2 நிமிடம் நனைத்து எடுத்து பின்பு சாதாரண நீரில் நனைக்க வேண்டும். வெப்ப நிலைக்கு ஏற்றவாறு நேரத்தை சரிப்படுத்த வேண்டும்.

உதாரணமாக, 50 டிகிரிக்கு, 3 நிமிடம் நனைக்க வேண்டும். சாதாரண நீரில் உப்பை, லிட்டருக்கு, 10 கிராம் என்ற அளவிலும், கார்பன்டசீம் லிட்டருக்கு, 2 கிராம் என்ற அளவில் கரைத்துக் கொள்ள வேண்டும். இதில் மாங்காயை நனைத்து எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம்காய்கள் ஒன்றன்மேல் ஒன்றாக ஏற்றும்போது அவை கெடாது. இத்தொழில் நுட்பம் மா ஏற்றுமதிக்கு மிகுந்த உதவியாக இருக்கும்.இவ்வாறு விளக்கம் அளித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in