காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் - பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் தொடக்கம் :

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் -  பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் தொடக்கம் :
Updated on
1 min read

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் நேற்று தொடங்கின.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மே 5-ம் தேதி முதல்மே 21-ம் தேதிவரை நடைபெறும்என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று காரணமாக இந்த மாணவர்களுக்கு வகுப்புகள் கடந்த ஓராண்டாக சரிவர நடைபெறவில்லை.

தற்போது கரோனா தொற்று அதிகரித்திருப்பதன் காரணமாக பல்வேறு தரப்பில் இருந்து பிளஸ் 2 தேர்வுகளை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. தேர்வுகளை தள்ளிவைப்பது தொடர்பாக தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தச் சூழ்நிலையில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் தேர்வுக்கு முன்நடைபெறும் பிளஸ் 2 செய்முறைத் தேர்வுகள் நேற்று தொடங்கின. கரோனா பரவலைத் தடுக்கஇந்தத் தேர்வுகள் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்டன. மாணவர்கள் அனைவரும் முகக்கவசம்அணிந்து வர வலியுறுத்தப்பட்டனர்.

நுண்ணோக்கி பயன்படுத்தவில்லை

இந்தத் தேர்வுகளை பள்ளிக்கல்வித் துறை இணை இயக்குநர் குமார் நங்கநல்லூரியில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தார். கரோனா விதிகள் சரியாக பின்பற்றப்படுகிறதாஎன்றும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலர் ஆஞ்சலோஇருதயசாமி உடனிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in