

விழுப்புரம் மாவட்டம் விக்கிர வாண்டி அருகே குட்டையில் குளித்த அக்கா, தம்பி உட்பட 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
விக்கிரவாண்டி அருகே பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சபரிநாதன். கூலி தொழிலாளியான இவரது மகள் கனிஷ்கா (8), மகன் லத்தீஷ் (5), அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி மகள் ரஷ்யா ( 7), மகன் தர்ஷன் (5) ஆகிய 4 பேரும் நேற்று மாலை 5 மணியளவில் அப்பகுதியில் உள்ள புளியங்குட்டையில் குளிக்கச் சென்றுள்ளனர்.
இறந்த நிலையில் மீட்பு
இதில், சிறுவன் தர்ஷன் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். மற்ற குழந்தைகளான கனிஷ்கா,ரஷ்யா, லத்தீஷ் ஆகிய 3 குழந்தைகள் இறந்த நிலையிலேயே மீட்கப்பட்டனர்.
இத்தகவலறிந்த விக்கிரவாண்டி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை செய்து, இறந்த குழந்தைகளின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீஸார் இதுதொடர் பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.