

விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பரவல் விகிதம் 1.9-ல் இருந்து ஒரே வாரத்தில் 5.6 ஆக உயர்ந்துள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை செயலருமான மதுமதி விருதுநகர், சிவகாசி ஆகிய அரசு மருத்துவமனைகள் மற்றும் செங்குன்றாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்யப்பட்டுள்ள கரோனா சிகிச்சை முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
அதைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இரா.கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்கள ராமசுப்பிரமணியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரு மாள், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் மனோகரன் ஆகியோர் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டத்தில் பேசினார்.
முன்னதாக மாவட்ட கண் காணிப்பு அலுவலர் மதுமதி செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
விருதுநகர் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அரசு மருத்துவமனைகளில் 780 படுக்கை வசதிகள் ஏற்படுத் தப்பட்டுள்ளன. அதில் 260 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதியோடு உள்ளவை. தற்போது 29 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர். இதுவரை 1,37,451 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி போடுவதற் காக 95 நிரந்தர மையங்களும், 35 தற்காலிக தடுப்பூசி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் 4,575 பேருக்கு பரிசோதனை செய்ததில் 86 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் கரோனா பரவல் விகிதம் 1.9-ல் இருந்து ஒரே வாரத்தில் 5.6 ஆக உயர்ந்துள்ளது.
அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடை வெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வெளியே செல் வோருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படுகிறது. இதுவரை ரூ.27,66,550 அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.
தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நரிக்குடி அருகே உள்ள வீரசோழன் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.