தொழிலாளர்கள் வருகை பதிவுக்காக - கைரேகை பதிவு செய்வதை நிறுத்த வலியுறுத்தல் :

தொழிலாளர்கள் வருகை பதிவுக்காக -  கைரேகை பதிவு செய்வதை நிறுத்த வலியுறுத்தல்  :
Updated on
1 min read

கரோனா பரவ வாய்ப்புள்ளதால் போக்குவரத்துக்கழகங்களில் வருகை பதிவுக்காக தொழி லாளர்கள் கைரேகை பதிவு செய்வதை தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகங் களின் தொழிலாளர் சம்மேளன பொதுச்செயலாளர் ஆர். ராதாகிருஷ்ணன் போக்குவரத்து துறை செயலாளருக்கு அனுப்பி யுள்ள மனு:

அரசுப் போக்குவரத்துக் கழகங் களில் பணியாளர்களின் வருகை பதிவுக்காக கைவிரல் ரேகை பதிவு செய்ய வேண்டியுள்ளது. போக்குவரத்துக் கழகங்களில் கைரேகை பதிவு செய்யும் போது தொற்று பரவ வாய்ப்புள்ளது. ரேகை பதிவு செய்வதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

பேருந்துகளின் இருக்கைகளில் மட்டும் பயணம் செய்திட அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் சில வழித்தடங்களில் காலை, மாலையில் நெரிசலான நேரங்களில் பேருந்து நிலையம், நிறுத்தங்களில் நடத்துநர் களுக்கும், பயணிகளுக்கும் மோதல் போக்கு உருவாகிறது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படுகிறது. இதற்கு சரியான முறையில் தீர்வு காண வேணடும்.

நிதி ஒதுக்க வேண்டும்

வரவு செலவு பற்றாக்குறை யால் திணறி வந்த போக்குவரத்துக் கழக நிர்வாகங்கள் கரோனா தொற்று காலத்துக்குப்பின் வரு வாய் இழப்பாலும் தவிக்கின்றன. எனவே, பேரிடர் நிதியாக ரூ.10 ஆயிம் கோடியை வழங்க வேண்டும் என்று கடந்த ஆண்டே கோரிக்கை வைத்திருந்தோம். போக்குவரத்து கழகங்களை பாதுகாக்க அரசு தேவையான நிதி ஒதுக்க வேண்டும். தொழிலாளர் நலன்களை காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in