

வானூர் அருகே லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலுார் மாவட்டம் செல்லஞ்சேரியை சேர்ந்தவர் பிரசாத்(29). லாரி ஓட்டுநரான இவர் கடந்த 10-ம் தேதி திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தில் ஜல்லி ஏற்றிக் கொண்டு புதுச்சேரி அருகே உள்ள உறுவையாறுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, பூத்துறை சறுக்கு பாலம் அருகே பைக்கில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் லாரியை மடக்கினர். பிரசாத்தை மிரட்டி ரூ.2,500 - ஜ பறித்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வானுார் போலீஸார்வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர். துத்திப்பட்டு வெறி (எ) பிரதாப்ராஜ்(20), மொரட்டாண்டி அபிதேஷ்வரன்(20), சரவணன்(20)ஆகிய மூவரையும் சந்தேகத்தின் பேரில் நேற்று முன்தினம் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் மூவரும், ஓட்டுநர் பிரசாத்திடம்கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்றதை ஒப்புக் கொண்டனர். அதன்பேரில், மூவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய கத்தி மற்றும் அபகரித்த ரூ.2,500 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.