

மதுரை மாநகராட்சி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மற்றும் சி அண்டு டி மருத்துவ சங்கம் சார்பில் தொழில் வர்த்தக சங்க வளாகத்தில் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் தொடங்கியது.
முகாமைத் தொடங்கி வைத்து மாநகராட்சி ஆணையர் விசா கன் பேசியதாவது: கரோனா தடுப்பூசிகள் மாநகராட்சியின் 31 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத் துவமனைகளில் இலவசமாகச் செலுத்தப்படுகிறது. முதலாவதாக சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் தடுப்பூசி திருவிழா தொடங்கியது. இரண்டாவதாக தொழில் வர்த்தக சங்க அரங்கில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படுகிறது என்று கூறினார்.
காமராசர் பல்கலை. துணை வேந்தர் எம்.கிருஷ்ணன், தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன், முதுநிலைத் தலைவர் ரத்தினவேல், சி அண்டு டி மருத்துவ சங்கத் தலைவர் ஜி.கணேசன், மாநகராட்சி உதவி ஆணையர் சண்முகம் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.