மீன்வளர்ப்பு குறித்த இணையதள பயிற்சி :

மீன்வளர்ப்பு குறித்த இணையதள பயிற்சி :
Updated on
1 min read

தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

'உயிர் கூழ்ம தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு' குறித்த ஒரு நாள் இணையதள வழியிலான பயிற்சி, வரும் 23-ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. உயிர் கூழ்ம திறன் என்றால் என்ன, அதன் முக்கியத்துவம், இந்த தொழில்நுட்பத்துக்கு ஏற்ற நீர்வாழ் உயிரினங்களின் வளர்ப்பு முறைகள், பயன்பாடுகள், செயல் திறன், எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் பொருளாதார மேலாண்மை ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.

ரூ. 300 கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியின் முடிவில் பயிற்சியாளர் சான்றிதழ் மற்றும் பயிற்சி கையேடு மின் அஞ்சல் வழியாக அனுப்பி வைக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் 22-ம் தேதி மாலை 5 மணிக்குள் 94422 88850 என்ற எண்ணில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in