வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தில் - தடையற்ற மின்சாரம் கிடைக்க ஈரோடு ஆட்சியர் நடவடிக்கை :

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள  மையத்தில் -  தடையற்ற மின்சாரம் கிடைக்க ஈரோடு ஆட்சியர் நடவடிக்கை  :
Updated on
1 min read

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் கேமராக்கள் தடையின்றி தொடர்ந்து இயங்கும் வகையில் யுபிஎஸ் வசதி ஏற்படுத்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பவானி, பெருந்துறை மற்றும் அந்தியூர் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், சித்தோடு சாலை போக்குவரத்து பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இங்கு மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறை உட்பட வளாகம் முழுவதும் 128 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களின் முகவர்கள், கேமரா பதிவுகளை தொடர்ந்து பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இரு நாட்களுக்கு முன்னர் பலத்த காற்றுடன் பெய்த மழையால் சில கேமராக்களின் இயக்கம் பாதிக்கப்பட்டு, சரிசெய்யப்பட்டன.

இந்நிலையில், ஐஆர்டிடி கல்லூரி மற்றும் கோபி, பவானிசாகர் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோபி கலை அறிவியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் மின் தடை ஏற்பட்டாலும், தொடர்ந்து கேமராக்கள் இயங்கும் வகையில், யுபிஎஸ் வசதி செய்ய மாவட்ட தேர்தல் அலுவலர் சி.கதிரவன் உத்தரவிட்டுள்ளார். மேலும், பலத்த காற்று வீசினாலும், இணைப்பு துண்டிக்கப்படாத வகையில், கேமரா ஒயர்களை அமைக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in