முயல் வேட்டையாடிய 7 பேர் கைது :

முயல் வேட்டையாடிய 7 பேர் கைது :
Updated on
1 min read

வைகுண்டத்தில் முயல் வேட்டையாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு ரூ.1.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

வைகுண்டம் வனச்சரகத்து க்கு உட்பட்ட அடைக்கலாபுரம் மேய்ச்சல் பரப்பில், வனச்சரக அலுவலர் விமல்குமார் தலைமையில் வனத்துறையினர் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அடைக்கலாபுரத்தை சேர்ந்த 7 பேர் காட்டு முயல்களை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள் 7 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.1.05 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இனிமேல் இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற அறிவுரை வழங்கி, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in