

சென்னையில் இருந்து சேலம் வந்த முதல்வர் பழனிசாமி, வீட்டில் ஓய்வில் உள்ளார். அ்திமுகவின் முக்கிய நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து வருகின்றனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி முடிந்த நிலையில், சேலம் நெடுஞ்சாலை நகரில் முதல்வர் பழனிசாமி தங்கியிருந்தார். தேர்தல் முடிந்த நிலையில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளை அழைத்து தேர்தல் நிலவரம் தொடர்பாக முதல்வர் ஆலோசனை நடத்தினார். மேலும், தேர்தலுக்காக பணியில் ஈடுபட்ட கட்சியினருக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.
கடந்த 10-ம் தேதி சென்னைக்கு சென்ற முதல்வர், கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில், நேற்று சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 8.16 மணிக்கு சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு வந்த முதல்வர் கார் மூலம் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் ஓய்வெடுத்தார். இதைத் தொடர்ந்து கட்சியின் முக்கிய நிர்வாகிகள் முதல்வரை சந்தித்து வருகின்றனர்.