விவசாயியிடம் ரூ.16,400 லஞ்சம் - சிவகங்கை நுகர்பொருள் வாணிப கழக ஊழியர் கைது :

விவசாயியிடம் ரூ.16,400  லஞ்சம்  -  சிவகங்கை நுகர்பொருள் வாணிப கழக ஊழியர் கைது :
Updated on
1 min read

நெல் கொள்முதலுக்கு சிவகங்கை விவசாயியிடம் ரூ.16,400 லஞ்சம் வாங்கிய நுகர்பொருள் வாணிபக் கழக ஊழியர் மதுரையில் கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை அருகே புல்லு கோட்டையில் நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில், நெல் கொள்முதல் நிலையம் செயல் பட்டு வருகிறது. இங்கு விவ சாயிகளிடம் கொள்முதல் செய் யும் நெல்லுக்குரிய தொகை, அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

இந்நிலையில், புல்லுக் கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் மருதங்குடியைச் சேர்ந்த அருளானந்து 540 நெல் மூட்டைகளை விற்பனை செய்திருந்தார். இதையடுத்து, நெல்லுக்குரிய பணத்தை அருளானந்துவின் வங்கிக் கணக்கில் செலுத்த, நுகர்பொருள் வாணிபக்கழகப் பணியாளர் மகேஸ்வரன் (45) ரூ.26,400 லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர், பேச்சுவார்த்தை நடத்தி ரூ. 16,400 தருமாறு கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அருளானந்து, இதுகுறித்து, சிவகங்கை லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். போலீஸார் அறிவுரைப்படி நேற்று முன்தினம் இரவு ரசாயன பவுடர் தடவிய ரூ.16,400-ஐ மதுரை தெப்பக்குளம் பகுதியில் இருந்த மகேஸ்வரனிடம் அருளானந்து கொடுத்தார். அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும், களவுமாக மகேஸ்வரனை பிடித்து கைது செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in