முகக்கவசம் முறையாக அணியவில்லை எனக் கூறி - சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்ணுக்கு அபராதம் : கண்டித்து வணிகர்கள் சாலை மறியல்

முகக்கவசம் முறையாக அணியவில்லை எனக் கூறி -  சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்ணுக்கு அபராதம் :  கண்டித்து வணிகர்கள் சாலை மறியல்
Updated on
1 min read

அரியலூர் மாவட்டம் ரெட்டிப்பா ளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அலமேலு(40). இவர் வி.கைகாட் டியில் டீ கடை மற்றும் பழக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் இவர் நேற்று மதியம் கடையில், தான் அணிந்திருந்த முகக்கவசத்தை சற்று கீழே இறக்கிவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு வந்த வருவாய்த்துறையினர் அலமேலு முகக்கவசத்தை முறையாக அணியவில்லை எனக்கூறி ரூ.200 அபராதம் வசூலித்துள்ளனர்.

இதைக்கண்டித்து அப்பகுதி வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த கயர்லாபாத் போலீஸார், அவர் களை சமாதானப்படுத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in