

தூத்துக்குடி சிப்காட் தொழிற் பேட்டையில் பணியாற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட தொழி லாளர்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நேற்று தொடங்கியது.
மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் வித்யா தொடங்கி வைத்தார். மாவட்ட தொழில் மைய மேலாளர் சொர்ணலதா, சிப்காட் திட்ட அலுவலர் லியோவாஸ், சிப்காட் தொழிற்சாலைகள் சங்க தலைவர் ஜோ பிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 10 நாட்கள் வரை முகாம் நடைபெறும்.