

பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காற்றுடன் மழை பெய்தது.
திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். நேற்றும் காலை வெயிலுடன், புழுக்கம் அதிகளவில் இருந்தது.
இந்நிலையில், திடீரென காற்றுடன் மழை பெய்தது. பல்லடம் நகர், பனப்பாளையம், வடுகபாளையம், அண்ணா நகர், மாணிக்காபுரம் சாலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ததால், வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.