உரம் விலை உயர்வை திரும்பப்பெற கொமதேக வலியுறுத்தல் :

உரம் விலை உயர்வை திரும்பப்பெற கொமதேக வலியுறுத்தல் :
Updated on
1 min read

விவசாயிகளை பெரிதும் பாதிக்கும் உரம் விலை உயர்வை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என கொமதேக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக கொமதேக மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:

வேளாண்மைக்கு அத்தியா வசியமான உரம் விலை கட்டுப்பாடின்றி உயர்ந்திருப்பது விவசாயிகளை வேதனைக் குள்ளாக்கி இருக்கிறது.ஏற்கெனவே, பல்வேறு பிரச்சினை களால் பாதிக் கப்பட்டு, தங்களது வாழ்வாதாரத்திற்காக போராடி கொண்டிருக்கும் விவசாயி களுக்கு, மென்மேலும் துயரத்தை கொடுக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது.உரம் விலை உயர்வால் சிறு, குறு விவசாயிகள் உரம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

பயிரிடப் பட்ட பயிருக்கு சரிவர உரம் கொடுக்கவில்லை என்றால் எதிர்பார்க்கும் அளவிற்கு மகசூல் கிடைக்காது. இந்த சூழ்நிலையில் விவசாயிகள் உரம் வாங்குவதற் காக மீண்டும் கடனாளி ஆகிறார்கள். உரம் விலை உயர்வால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை மத்திய அரசு புரிந்துகொண்டு, விலை உயர்வை திரும்பப்பெற, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in