ஈரோட்டில் நேற்று 117 பேர் கரோனாவால் பாதிப்பு - 2035 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு :
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று உள்ள 146 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 2035 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் ஆட்சியர் பேசியதாவது:
பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா பாதித்த நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் 550 படுக்கை வசதிகளுடன் தயார் நிலையில் உள்ளது. மேலும், ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் கல்லூரி கரோனா சிகிச்சை மையங்களில் முன்னெச்சரிக்கையாக 2000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன.
கரோனா பாதித்தவர்களின் உடல் ஆரோக்கியத்தை பொறுத்து, மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளவும் அல்லது அவர்களின் இல்லத்தில் தனிமைப்படுத்துவதற்கும் பிரித்து அனுப்பப்படுகின்றனர். இதற்காக, 4 இடங்களில் கரோனா பரிசோதனை மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பவானி, மொடக்குறிச்சி ஆகிய 2 இடங்களில் மையங்கள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தொற்று உள்ள 146 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அவர்களுடன் தொடர்பில் இருந்த 2035 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி போதிய அளவில் இருப்பில் உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் சி.கதிரவன், அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத 6 கடைகளுக்கு சீல் வைக்கவும், அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.
நேற்றைய பாதிப்பு
