உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் தேரோட்டம் ரத்து :

உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் தேரோட்டம் ரத்து :
Updated on
1 min read

திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் கோயிலில் இந்த ஆண்டு சித்திரை தேர்த் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோயில் நிர்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை முதல் நாள் நடைபெறும் சித்திரை தேர்த் திருவிழா இந்த ஆண்டு ஏப்.14-ம் தேதி (நாளை)நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

இந்தநிலையில், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றும் வகையில் இந்த ஆண்டு சித்திரை தேர்த் திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், பக்தர்கள் பால்காவடி, அலகு காவடி, அக்னிசட்டி எடுக்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளின்படி பக்தர்கள் தரிசனத்துக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, பக்தர்கள் அரசின் விதிமுறைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மலைக்கோட்டை கோயிலிலும்...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in